தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
காற்றுடன் பெய்த கனமழைக்கு தேவாலா அரசுப் பள்ளியின் மேற்கூரை சேதம்!
கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழைக்கு தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இரவு சேதமடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை பெய்துவருகிறது.இரவு நேரத்தில் திடீரென காற்றுடன் கனமழை பெய்ததால் தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டு சுமாா் 150 மீட்டா் தொலைவில் விழுந்தது.
இரவு நேரம் என்பதால் அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்த கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன், வருவாய்த் துறையினா், எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் இடிபாடுகளை அகற்றமுடியாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.