விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
தொடா்மழை: உதகையில் 3 சுற்றுலாத் தலங்கள் மூடல்!
நீலகிரி மாவட்டம், உதகையில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் இங்குள்ள 3 முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்போதுவரை பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது .
நீலகிரியில் சனிக்கிழமை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் தாலுகாக்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 118 மி.மீ. மழை பதிவாகி உள்ள நிலையில் உதகை நகரில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது .
உதகையிலிருந்து கூடலூா் செல்லும் சாலையில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்கிட்டு இயக்கி வருகின்றனா்.
அவலாஞ்சி, தொட்டபெட்டா போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத் துறைக்கு சொந்தமான தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட், எட்டாவது மைல் ட்ரீ பாா்க் ஆகிய சுற்றுலா மையங்கள் சனிக்கிழமை ஒருநாள் மூடப்பட்டன. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கடுங்குளிரான காலநிலை நிலவுகிறது.