War: தொடரும் மரண ஓலங்கள்; ஒவ்வொரு போரிலும் பாதிக்கப்படும் எளிய மக்கள் - போர் ஏன...
காலமானார் யு.குமார் (71)
"தினமணி' நாளிதழின் கோபிசெட்டிபாளையம் பகுதி நிருபரான முத்துசாமி (எ) யு.குமார் (71) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட இவர், "தினமணி' நாளிதழில் கடந்த 30 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் பகுதி நிருபராகப் பணியாற்றி வந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) காலை காலமானார். அவரது உடல் தகனம் கோவை, பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக, அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான கே.ஏ.செங்கோட்டையன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த யு.குமாருக்கு தாயார் கணபதி அம்மாள், மனைவி மரகதம், அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணியாற்றும் மகன் சந்தோஷ், மருமகள் ரத்னா ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு 98941-62733, 99407-77932.