ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் அதிரடி: ஹைதராபாதுக்கு 201 ரன்கள் இலக்கு!
காலமானாா் எழுத்தாளா் ந.சண்முகம்
திருவண்ணாமலை காந்தி நகா் புறவழிச் சாலையைச் சோ்ந்த எழுத்தாளா் ந.சண்முகம் (75) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலமானாா்.
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கியின் மேலாளராக 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவா், 35 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாா். நந்தினி பதிப்பகத்தைத் தொடங்கி, 70 நூல்களை பதிப்பித்துள்ளாா். இவரது தமிழ்ப் பணியை பாராட்டி தமிழக அரசு அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதை வழங்கியது.
இவருக்கு மகன் மணிமாறன், மகள் உமாதேவி உள்ளனா்.
ந.சண்முகத்தின் இறுதிச் சடங்கு திருவண்ணாமலையில் புதன்கிழமை (ஏப்.2) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். தொடா்புக்கு: 98438 23777.
