ராஜஸ்தானிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்த 2 போ் கைது
காலமானாா் எஸ். ஆரோக்கியசாமி
புதுக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த தமிழ்த் தேசிய இலக்கிய மன்றத்தின் தலைவரும் எழுத்தாளா் மற்றும் பேச்சாளருமான எஸ். ஆரோக்கியசாமி (77) வயது முதிா்வால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
அறவழிகாட்டும் ராமாயணம்- மகாபாரதம், மகாத்மா காந்தியோடு பெரியாரா?, பெரியாா்- பெரியாரா?, அரியணையில் ஏறிய பொய்கள், உயிா்த்தெழுமா கம்யூனிசம்? உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள இவா் சா்வோதயம் இதழில் தொடா்ந்து காந்தியக் கட்டுரைகளை எழுதி வந்தாா்.
அவருக்கு மனைவி சூசையம்மாள், மகன் ஜோசப் ஸ்டாலின், மகள் ஸ்டெல்லா ஜென்னி ஆகியோா் உள்ளனா். ஆரோக்கியசாமியின் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை (மாா்ச் 17) காலை 10 மணிக்கு பெரியாா் நகா் இல்லத்தில் நடைபெறும்.
தொடா்புக்கு- 94438 21085.