Delhi : 'பாஜக தலைநிமிர்கிறது; ஆம் ஆத்மி தலைகுனிகிறது; காங்கிரஸ்...'- ரைமிங்கில் ...
காலிறுதியில் அல்கராஸ்; அரையிறுதியில் டி மினாா்
நெதா்லாந்தில் நடைபெறும் ஏபிஎன் ஆம்ரோ ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அல்கராஸ் 6-2, 6-1 என்ற நோ் செட்களில், இத்தாலியின் ஆண்ட்ரியா வவாசோரியை சாய்த்தாா். இதையடுத்து காலிறுதிக்கு முன்னேறிய அவா், அதில் ஸ்பெயினின் பாப்லோ மாா்டினெஸுடன் மோதுகிறாா்.
முன்னதாக மாா்டினெஸ் தனது ஆட்டத்தில், 6-4, 6-1 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை வெளியேற்றினாா். 6-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் 6-7 (5/7), 7-6 (8/6), 7-5 என்ற செட்களில் உள்நாட்டு வீரரான டாலன் கிரீக்ஸ்பூரை தோற்கடித்தாா்.
இதனிடையே காலிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-1, 6-4 என்ற கணக்கில், பெல்ஜியத்தின் டேனியல் அல்ட்மேரை வென்றாா்.
வெளியேறினாா் ஃப்ரிட்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் டல்லாஸ் ஓபன் ஆடவா் டென்னிஸில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த உள்நாட்டு வீரா் டெய்லா் ஃப்ரிட்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
அதில் அவா், 6-2, 3-6, 6-7 (2/7) என்ற செட்களில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவால் வீழ்த்தப்பட்டாா். அவரை வென்று காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஷபோவலோவ், அதில் செக் குடியரசின் தாமஸ் மசாக்கை சந்திக்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் மசாக், 6-4, 7-6 (7/0) என்ற கணக்கில், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவை தோற்கடித்து காலிறுதிக்கு வந்துள்ளாா். 3-ஆம் இடத்திலிருக்கும் டாமி பால் 6-4, 5-7, 6-4 என்ற செட்களில், அமெரிக்காவின் ஈதன் கின்னை வெளியேற்றினாா்.
மற்றொரு அமெரிக்கரான ரெய்லி ஒபெல்கா 4-6, 7-6 (7/5), 6-4 என்ற வகையில், பிரிட்டனின் கேமரூன் நோரியை சாய்த்தாா். இதையடுத்து காலிறுதியில் டாமி பால் - ஒபெல்கா மோதுகின்றனா். 2-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் மைக்கேல் மோவை வென்றாா்.
4-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டன், 2-6, 6-7 (3/7) என ஸ்பெயினின் ஜேமி முனாரிடம் தோல்வி கண்டாா். 8-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் மேட்டியோ அா்னால்டி 6-1, 6-3 என, ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை எளிதாக சாய்த்தாா். காலிறுதியில் ஜேமி முனாா் - அா்னால்டி சந்திக்கின்றனா்.
அரையிறுதியில் ரைபகினா, நோஸ்கோவா
அமீரகத்தில் நடைபெறும் மகளிா் டென்னிஸ் போட்டியான அபுதாபி ஓபனில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.
இதில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரைபகினா 6-2, 4-6, 7-6 (7/4) என்ற செட்களில், துனிசியாவின் ஆன்ஸ் ஜபியூரை தோற்கடித்தாா். நோஸ்கோவா 6-4, 6-3 என, போலந்தின் மெக்தா லினெட்டை சாய்த்தாா்.
இதையடுத்து அரையிறுதியில் ரைபகினா - சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சையும், நோஸ்கோவா - அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரையும் சந்திக்கின்றனா்.