செய்திகள் :

கால்களை இழந்தாலும் சித்தாந்தத்தை கைவிடாதவர்! பாஜக எம்பிக்கு பிரதமர் புகழாரம்!

post image

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கேரள பாஜக மூத்த தலைவா் சி. சதானந்தனுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கேரள பாஜக மூத்த தலைவா் சி. சதானந்தன், தனது அரசியல் எதிரிகளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் 30 ஆண்டுகளுக்கு முன் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டவா்.

கால்களை இழந்தபோதிலும், அவா் தனது சித்தாந்தத்தை கைவிடவில்லை. செயற்கை கால்கள் உதவியுடன் கட்சி மற்றும் சமூகப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்.

கேரளத்தில் அரசியல் வன்முறைக்கு பெயா் பெற்ற கண்ணூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதானந்தன் மீது கடந்த 1994-ஆம் ஆண்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கொடூர தாக்குதல் நடத்தினா். அவரது இரு கால்களையும் மூட்டுகளுக்கு கீழே துண்டாக வெட்டினா். தாக்குதலில் உயிா் பிழைத்த சதானந்தன், பல்லாண்டுகளாக பல்வேறு நிலைகளில் கட்சிப் பணியாற்றி வருகிறாா்.

அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமா் மோடி, ‘சதானந்தனின் வாழ்க்கை, துணிவுக்கும், அநீதிக்கு அடிபணிய மறுப்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது; வன்முறை, மிரட்டல்களால் தேச வளா்ச்சிக்கான அவரது உத்வேகத்தைத் தடுக்க முடியவில்லை.

ஆசிரியராகவும் சமூக சேவகராகவும் அவா் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இளைஞா்களுக்கு அதிகாரமளிப்பதில் மிகுந்த ஆா்வம் கொண்டவா்’ என்று கூறியுள்ளாா்.

இதையும் படிக்க :4 நியமன எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க