செய்திகள் :

காவல்துறை பணியாளர்களுக்கு உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி வழங்கிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை

post image

மருத்துவ அவசரநிலைகளை திறம்பட எதிர்கொள்வதில் எப்போதும் தயாராக இருப்பதற்கான ஒரு முன்னோடித்துவ நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் மதுரை மாவட்ட காவல்துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் (MMHRC) இணைந்து ஒரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது; மதுரை மாவட்ட காவல்துறை பணியாளர்களுக்கு CPR (Cardio-Pulmonary Resuscitation) மற்றும் BLS (Basic Life Support) ஆகியவற்றில் மாவட்ட அளவிலான பயிற்சியளிப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி
உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி

திடீரென ஏற்படும் cardiac arrest மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான அவசர நிலைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு உயிர்காக்கும் அவசரநிலை சிகிச்சை உத்திகளில் மாவட்டத்தின் ஒட்டுமொத்த காவல்துறையினரும் முறைப்படி பயிற்சியளிக்கப்படுவது தமிழ்நாடு மாநிலத்தில் இதுவே முதன்முறையாகும். தொடர்ந்து வரும் 18 சனிக்கிழமைகளில், மதுரை மாவட்டம் முழுவதிலும் பணியாற்றுகிற காவல்துறையினருக்கு இதில் சிறப்பான பயிற்சியளிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இது தொடர்பான முதல் நேரடி அமர்வு மதுரையிலுள்ள SS மஹாலில் நடைபெற்றது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை குழுவினர், CPR மற்றும் BLS ஆகியவற்றைப் பற்றித் தெளிவான விளக்கம் மற்றும் செயல்முறை பயிற்சிகளை வழங்கினர். போக்குவரத்து விபத்துகள், திடீரென ஏற்படும் மருத்துவ அவசரநிலைகளின் போது உதவி வழங்கும் முதல் நபர்களாக காவல்துறை அதிகாரிகளே பெரும்பாலும் இருப்பதால் இந்த பயிற்சி பெற்றவர்களாக அவர்கள் இருப்பது மிக முக்கியம். மருத்துவ உதவி வந்து சேரும் வரை, “Golden Hour” என அழைக்கப்படுகிற நேரத்தை, “சிகிச்சைக்கான நேரமாக” மாற்றுவது இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை
மீனாட்சி மிஷன் மருத்துவமனை

இந்த பயிற்சி அமர்வில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் , MMHRC-ன் அவசர சிகிச்சை பிரிவின் இயக்குநர் திரு. நரேந்திர நாத் ஜெனா மற்றும் இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் சிறப்பு மருத்துவர்களான டாக்டர். S. பிரபு, டாக்டர். ஷீமா கண்மணி மற்றும் டாக்டர். நான்சி ஆகியோருடன் மார்க்கெட்டிங் பொது மேலாளர் திரு. சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உணவில் உப்பே சேர்க்கவில்லை என்றால் என்னவாகும்? - AI அறிவுரையும் மருத்துவர் விளக்கமும்..!

பொதுவாக நாம் தினசரி உணவில் பயன்படுத்தப்படும் உப்பு, சோடியம் மற்றும் குளோரைடால் ஆனது. இது உடலில் சோடியத்தின் அளவை சரியாக வைத்துக் கொள்ளவும், ரத்தத்தின் குளோரைடு அளவை பராமரிக்கவும் உணவில் சேர்க்கப்படுகி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 176 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 3,256 மாணவிகள் இணைந்து உலக சாதனை! | Photo Album

உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்பு... மேலும் பார்க்க

Presbyopia: வெள்ளெழுத்துப் பிரச்னைக்குத் தீர்வா? அமெரிக்க சொட்டு மருந்தின் பின்னணி என்ன?

மிடில் ஏஜ்ல இருக்கிற பலர், நியூஸ் பேப்பரையும் செல்போனையும் கண்ணுக்குப் பக்கத்துல, கொஞ்சம் தூரத்துல வெச்சு படிக்கிறதுக்குப் போராடிக்கிட்டு இருக்கிறதைப் பலரும் பார்த்திருப்போம். இதுவொரு நார்மலான பிரச்னை... மேலும் பார்க்க

Apollo children hospital: 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இதய சிகிச்சை!

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகளுக்கான 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகளையும், குழந்தைகளுக்கான 10,000 துளையிடும் இதய சிகிச்சை நடைமுறைகளையும் வெற்றிகரமாகச் செய்துள்ளது!சென்னை, ஆகஸ்ட் 6, 2025: இ... மேலும் பார்க்க

World Breast Feeding Week: சீம்பால் முதல் தாய்ப்பால் அருந்துகையில் குழந்தையின் மூக்கு பொசிஷன் வரை!

தாய்மை அடைந்திருக்கும் அம்மாக்களுக்கும், தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்களுக்கும் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் மீனா பிரகாஷ், குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு மற்றும் பிரசவகால, தாய்ப்பால் அற... மேலும் பார்க்க

பசியே இல்லையா; இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

''அதிகம் பசிப்பது எப்படிப் பிரச்னைக்குரிய விஷயமோ, பசியே இல்லாதது அதைவிடவும் பெரிய பிரச்னை. உடல், மன நல மாற்றங்களின் காரணமாகப் பசியின்மை ஏற்படுகிறது. ஒரு வாரத்துக்கும் மேல் பசியின்மை தொடர்ந்தால், அது ந... மேலும் பார்க்க