`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?...
காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விளக்கம்
காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து சத்யம் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது.
வெள்ளக்கோவிலில் சத்யம் இண்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவா்களுக்கு காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்குவதற்காக பள்ளி நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட மாணவா்களுக்கு லாக்கப் அறை, வாக்கி டாக்கி, துப்பாக்கிகள் உள்ளிட்டவை குறித்து காவலா்கள் விளக்கம் அளித்தனா்.
இதேபோல, வெள்ளக்கோவில் தலைமை தபால் நிலையம், தீயணைப்பு நிலையம், அரசு நூலகத்துக்கும் மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைவா் கே.ஆா். சின்னசாமி, தாளாளா் ஆடிட்டா் எஸ்.ரகுநாதன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.