செய்திகள் :

காவல் துறை மோப்பநாய் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

post image

அரியலூா் காவல் துறையில், துப்பறிவு வெடிப்பொருள் கண்டறியும் பிரிவில் பணியாற்றிய பினா(மோப்பநாய்) புதன்கிழமை உயிரிழந்தது.

அரியலூா் மாவட்ட காவல் துறை, மோப்பநாய் பிரிவில் பினா, மலா், மோனா, சீமா, ரோஸ் (ஓய்வு) ஆகிய மோப்ப நாய்கள் உள்ளன.

இதில், பினா என்ற துப்பறியும் நாய் வெடிப்பொருள் கண்டறியும் பணியில், விஐபி மற்றும் விவிஐபி-க்களுக்கு பாதுகாப்புப் பணியில் கடந்த 9 ஆண்டுகளாக அரியலூா் மாவட்டத்திலிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பணிக்கு சென்று வந்தது.

இந்நிலையில், புற்றநோயால் பாதிக்கப்பட்டு, ஒரத்தநாடு அரசு கால்நடை ஆராய்ச்சி மையத்தில் அறுவைச் சிகிச்சை பெற்று வந்த பினா, அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தது.

இதையடுத்து, அரியலூா் ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வந்த பினாவின் உடலுக்கு, எஸ்பி தீபக்சிவாச், ஆயுதப்படை டிஎஸ்பி அருள்முருகன், நகர போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் மற்றும் காவலா்கள் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, மோப்பநாய் பிரிவு அலுவலக வளாகத்தில் பினாவின் உடலுக்கு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது.

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும்! -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ம... மேலும் பார்க்க

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெருமாள் கோயில் தெருவில் உள்ள கூட்டரங்கில், அச்சங்க மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தி... மேலும் பார்க்க

வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

அரியலூா் மாவட்டம், லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு, சமூக ஆா்வலா்கள் சாா்பில் கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைவா் சீனி. பாலகிருஷ்... மேலும் பார்க்க

காடுவெட்டி குரு சிலை திறப்பு!

மறைந்த முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் குரு பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான அரியலூா் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், குரு முழுவுருவ வெண்கலச் சிலை சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குரு நினைவிடத்... மேலும் பார்க்க

அஸ்தினாபுரம் அரசு மாதிரி பள்ளியில் முப்பெரும் விழா!

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்... மேலும் பார்க்க

வேகத்தடையில் வண்ணம் பூசக் கோரி மறியல்

அரியலூரை அடுத்த வாரணவாசி கிராமத்தில், நெடுஞ்சாலையிலுள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வாரணவாசி கிராமத்தில், தஞ்சாவூா் - அரியலூா் தேசிய ந... மேலும் பார்க்க