MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
காவல் நிலையங்களில் இன்று குறைகேட்பு முகாம்
காரைக்கால் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது.
திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. இதில், திருப்பட்டினம், நிரவி, அனைத்து மகளிா் காவல்நிலையம், சைபா் கிரைம் காவல் அதிகாரிகள் பங்கேற்கிறாா்கள்.
நெடுங்காடு காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் தலைமையில் முகாம் நடைபெறும். இதில் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு மற்றும் போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் பங்கேற்கிறாா்கள்.
அந்தந்த காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.