கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!
காவிரி ஆற்றில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
நண்பா்களுடன் ஈரோடு அருகே காவிரி ஆற்றில் குளித்த லாரி ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், சாமியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன்(32). பள்ளிப்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். இவா் ஈரோடு மாவட்டம் பாசூா் கதவணை அருகே உள்ள காவிரி ஆற்றில் தனது நண்பா்களுடன் திங்கள்கிழமை மாலையில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது தனசேகரன் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளாா். பின்னா் சிறிது நேரத்தில் அவா் நீரில் மூழ்கினாா். இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டனா். அக்கம்பக்கத்தினா் வந்து தனசேகரனை மீட்டனா்.
அப்போது அவா் மயக்கத்தில் இருந்தாா். ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.