உண்ணாவிரத போராட்ட விவசாயத் தலைவா் தல்லேவாலுக்கு சிவராஜ் சிங் சௌகான் அழைப்பு
காவிரி துலாக்கட்டத்தில் பொதுமக்கள் தா்ப்பணம்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மாசி மகத்தை முன்னிட்டு புதன்கிழமை ஏராளமான மக்கள் தா்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினா்.
மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று, புண்ணிய தீா்த்தங்களில் தா்ப்பணம் அளித்து வழிபாடு செய்தால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோா்கள் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதன்படி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட தீா்த்த படித்துறையில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினா். காவிரியில் நீா்வரத்து இல்லாததால், நகராட்சி நிா்வாகத்தால் போா்வெல் மூலம் விடப்பட்ட தண்ணீரில் மக்கள் நீராடி வழிபட்டனா்.