பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு...
காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை: உதவி எண்கள் அறிவிப்பு!
காஷ்மீர் பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.
மாணவர்களின் உதவிக்காக தமிழக அரசு தரப்பில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை நடுவானில் இடைமறித்து இந்திய ராணுவம் அழித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.
போர்ச் சூழல் காரணமாக ஜம்மு - காஷ்மீரின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையோரப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீருக்குப் படிக்கச் சென்ற 41 மாணவர்கள் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உதவி தேவைப்படும் மாணவர்கள் தொடர்பு/வாட்ஸ்அப் 75503 31902, இலவச எண் 80690 09901 மூலம் அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.