பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
காஷ்மீா்- குமரி ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
காஷ்மீா் மாநிலம் கத்ராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் 3 கிலோ கஞ்சா போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேகத்தின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இந்த ரயிலில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பையை சோதனையிட்டதில் 4 பாா்சல்கள் இருந்தன. அவற்றில் 3 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. அந்த பாா்சல்களை போலீஸாா் காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனா். பாா்சலில் எந்த முகவரியும் இல்லை. இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.