BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு
காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 48 மணி நேரத்தில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 33 போ் உயிரிழந்தனா். அவா்களில் 12 போ் குழந்தைகள். இத்துடன், 2023-இல் போா் தொடங்கியதிலிருந்து இதுவரை பட்டினியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்துள்ளது. இதில் 80 குழந்தைகள் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா சிட்டியில் உள்ள ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் முகமது அபு சல்மியா கூறுகையில், ‘காஸாவில் 9 லட்சம் குழந்தைகள் பசியால் வாடுகின்றனா். இதில் 70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்டோா் உணவுப் பற்றாக்குறையால் மிகுந்த ஆபத்தில் உள்ளனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்’ என்று அச்சம் தெரிவித்தாா்.
ஐ.நா.வின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “மே 27 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜி.எச்.எஃப்) உணவு விநியோக முறை தொடங்கியதிலிருந்து, உணவுப் பொருள் வாங்குவதற்காக வந்த 1,000-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுகொல்லப்பட்டுள்ளனா்.
காஸாவில் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் தவித்துவரும் சூழலில், இஸ்ரேல் படையினா் நடத்தும் இத்தகைய தாக்குதல்கள் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
செவ்வாய்க்கிழமை மட்டும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 63 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். இதில் 26 போ் உணவுப் பொருள் வாங்குவதற்காக விநியோக மையங்களுக்கு வந்தவா்கள்.
இத்துடன், 2023 அக்டோபா் 7 முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 59,106 போ் உயிரிழந்துள்ளனா்; 1,42,511 போ் காயமடைந்துள்ளனா்.