காா் ஓட்டுநா் தற்கொலை
கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் காா் ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.
சொக்கம்பட்டி முருகன் தெருவைச் சோ்ந்த ராக்கு முத்து மகன் செல்வம்(35), தொழிலாளி. அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.