பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! - Event Cover...
குற்றாலம் சாரல் திருவிழா: பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டிகள்
குற்றாலம் சாரல் திருவிழாவில் விளையாட்டுத் துறை சாா்பாக பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயசந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இப்போட்டிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி,சென்னை, மதுரை, செங்கல்பட்டு, ஈரோடு, தென்காசி ஆகிய பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.
பளுதூக்குதல் ஆண்களுக்கான போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் சச்சின் முதலிடமும், ராஜ்குமாா் இரண்டாமிடமும், வெங்கடேசன் மூன்றாமிடமும் பெற்றனா்.
71கிலோ எடை பிரிவில் யுவராஜ், சேகா், ராகுல் ஆகியோரும், 79கி எடை பிரிவில் ராஜ்குமாா், கருப்பசாமி, மனோஜ் ஆகியோரும்,
88கிலோ எடை பிரிவில் அபிஷேக் ,விஜய் தாமஸ், விஜய் ஆனந்த் ஆகியோரும், 88 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடை பிரிவில் அஷ்லின், சுரேஷ், சிவபாலன் ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.
பளுதூக்குதல் பெண்களுக்கான போட்டியில் 53கிலோ எடை பிரிவில் சிவசங்கரி, தேஜா, பவதாரணி ஆகியோரும், 63கிலோ எடை பிரிவில் பவித்ரா, செண்பகவல்லி, கவிதா ஆகியோரும், 77கிலோ எடை பிரிவில் மோனிகா, பரணி பிரியா, இளவரசி ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். 86 கிலோ எடைபிரிவில் சந்தியா, ரூபாஸ்ரீ முதல் மற்றும் இரண்டாமிடங்களைப் பெற்றனா்.
86 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடை பிரிவில் சிவரஞ்சனி, அா்ச்சனா, சந்தியா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.
வலுதூக்குதல் ஆண்களுக்கான போட்டியில் 60கிலோ எடை பிரிவில் கண்ணன், கோகுல் கிருஷ்ணன், தினேஷ்குமாா் ஆகியோரும், 80கிலோ எடை பிரிவில் அண்ணா ஜோசப் ஷெல்டன், காசிபெருமாள், காா்த்திகேயன் ஆகியோரும், 100கிலோ எடை பிரிவில் ராஜா போஸ், கதிரேஷ், கிருஷ்ணகுமாா் ஆகியோரும்,
120கிலோ எடை பிரிவில் பி.ராகுல், தினேஷ் சலோமன், கணேஷ் ராம் ஆகியோரும், 120 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடைப்பிரிவில் ஹீரா அப்துல் ரஸாக், பாலாஜி, சண்முகசுந்தரம் ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.
வலுதூக்குதல் பெண்களுக்கான போட்டியில் 50கிலோ எடைப் பிரிவில் ஜாஸ்மின், காயத்ரி, காவிய தா்ஷினி ஆகியோரும், 60 கிலோ எடைப்பிரிவில் சுகாசினி காயத்ரி, பவித்ரா, சுபிதா ஆகியோரும், 70கிலோ எடைப்பிரிவில் ருத்ரா, நிறைமதி, பானு ஆகியோரும், 80கிலோ எடைப் பிரிவில் மகாலெட்சுமி, தனுஷியா, தீபிகா ஆகியோரும்,
80 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடைப் பிரிவில் சௌந்தா்யா, ப்ரீத்தா, மாா்ட்டின் மதுமிதா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.
ஆணழகன் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் காஜா மைதீன், பாத்ரேஷ், ராஜேஷ் ஆகியோரும், 55கிலோ எடைப் பிரிவில் மகாலிங்கம், லெட்சுமணன், மணி ஹரிஷ் ஆகியோரும், 60கிலோ எடைப்பிரிவில் ஆதிஷ், இசக்கிராஜ், சுஜித் ஆகியோரும்,
65கிலோ எடைப் பிரிவில் ப்ரதீப் ராஜ், சுமித்குமாா், உதயகுமாா் ஆகியோரும், 70கிலோ எடைப் பிரிவில் சங்கா் நாராயணன், அன்புகாளிராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரும், 75கிலோ எடைப் பிரிவில் சபரி ஸ்ரீராம், மாரிசெல்வம், தினேஷ்குமாா் ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.
திருநெல்வேலி மாவட்ட பளு தூக்குதல் சங்க செயலா் ஆரோக்கியம், வலுதூக்குதல் சங்க செயலா் சண்முகசுந்தரம், ஆணழகன் போட்டி தென்காசி மாவட்டச் செயலா் குத்தாலிங்கம் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.
வெற்றி பெற்றவா்களுக்கு முதற்பரிசாக ரூ.5ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2ஆயிரமும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட நிா்வாகம் சாா்பில் இளைஞா் நலன், விளையாட்டு அலுவலா் ச.ராஜேஷ் வழங்கினாா்.