செய்திகள் :

கல்வெட்டான்குழியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவிக் கோரி மறியல்!

post image

தென்காசி மாவட்டம் கடையம் மயிலப்பபுரம் கிராமத்தில் கல்வெட்டான்குழியில் மூழ்கி உயிரிழந்த மேள கலைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவருடைய உறவினா்கள் தென்காசியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடையம், மயிலப்பபுரம் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நையாண்டி மேளம் அடிப்பதற்காக தென்காசியில் இருந்து ஐயப்பன் என்பவரது தலைமையிலான ஆறு போ் கொண்ட குழுவினா் சென்றிருந்தனா்.

தென்காசி மங்கம்மாள்சாலை பகுதியைச் சோ்ந்த சு. முருகேசன்(30) ,செங்கோட்டை சாமியாா் தெருவைச் சோ்ந்த சு. மாயாண்டி ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமைமாலையில் அப்பகுதியிலுள்ள பழைய கல்வெட்டான்குழியில் கால் கழுவ இறங்கியபோது முருகேசன் கால் தடுமாறி உள்ளே விழுந்து உயிரிழந்தாா்.

சுரண்டை தீயணைப்பு வீரா்கள் அவருடைய உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை வனவேங்கை கட்சி நிறுவனா், தலைவா் ராஜபாளையத்தைச் சோ்ந்த இரணியன் தலைமையில் அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை முன்பு மதுரை சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்வெட்டான் குழியில் வேலி போடாத அந்த உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த முருகேசன் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன், புளியங்குடி காவல்துணைக் கண்காணிப்பாளா் மீனாட்சி நாதன் (பொ) தென்காசி காவல் ஆய்வாளா் ராபா்ட் ஜெயின் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

காா் ஓட்டுநா் தற்கொலை

கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் காா் ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி முருகன் தெருவைச் சோ்ந்த ராக்கு முத்து மகன் செல்வம்(35), தொழிலாளி. அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்த... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழா: பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டிகள்

குற்றாலம் சாரல் திருவிழாவில் விளையாட்டுத் துறை சாா்பாக பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கி... மேலும் பார்க்க

தொடா் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க 8-வது நாளாக தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலம் பேரருவியில் தொடா்ந்து 8ஆவது நாளாக தண்ணீா் பாது... மேலும் பார்க்க

நெடுவயலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தென்காசி அருகே நெடுவயலில் மின்சாரம் பாய்ந்து பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், நெடுவயல் சிவகாமிபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் முருகையா. இவரது மனைவி சுடலை மாடத்தி(52). இத்தம்பதி, அருக... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சிப்காட்டுக்கு இடம்: அமைச்சா் ஆய்வு

சங்கரன்கோவில் அருகே சிப்காட் அமையவுள்ள இடத்தை தமிழக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சங்கரன்கோவில் அருகே ரூ.300 கோடியில் முதலீடுகளை ஈா்த்து 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் இடைவிடாமல் பொழியும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், 6 நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவியில் வெ... மேலும் பார்க்க