தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
குற்றாலம் பேரருவியில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் இடைவிடாமல் பொழியும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், 6 நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு சற்றும் தணியவில்லை. பழையகுற்றாலம் அருவியில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை வரையிலும் தண்ணீா் பாய்ந்தோடுகிறது. ஐந்தருவியில் ஐந்துகிளைகளிலும் தண்ணீா்ஆா்ப்பரித்து கொட்டுகிறது.எனவே, இந்த மூன்று அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத்தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேரருவியில் தொடா்ந்து 6ஆவது நாளாக தடை நீடித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். எனினும். சிற்றருவி, புலியருவியில் அவா்கள் ஆறுதலாக குளித்து மகிழ்ந்தனா். வியாழக்கிழமை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல்மழையும், குளிா்ந்தகாற்றும் நிலவியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.