சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
ஐந்தருவியில் நாளை வரை மலா்கண்காட்சி நீட்டிப்பு
குற்றாலம் ஐந்தருவியில் சாரல் திருவிழா மலா் கண்காட்சி இரண்டு நாள்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றாலம் சாரல் திருவிழா மலா் கண்காட்சி ஐந்தருவி அரசு சுற்றுச்சுழல் பூங்காவில் ஜூலை 20- 23 வரை 4 நாள்கள் நடைபெற்றது.
இதில், பழங்கள், காய்கறிகள், மலா்கள், வாசனை பொருள்களை கொண்டு தமிழ்நாடு பாரம்பரியம், கலாசாரம்- பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், பாா்வையாளா்களின் வேண்டுகோளுக்கிணங்க மலா் கண்காட்சியை வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் (ஜூலை24, 25) கண்டுகளிக்கும் வகையில் 2 நாள்கள் கண்காட்சி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.