சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
குற்றாலம் அருவிகளில் தொடா் வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் சாரல்மழையின் காரணமாக பிரதான அருவிகளில் வெள்ளப் பெருக்கு நீடித்து வருகிறது.
குற்றாலம் பேரருவியில் 5ஆவது நாளாக புதன்கிழமையும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 5ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டது.
பழைய குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீா்வரத்து குறையவில்லை. இவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும், புலியருவி, சிற்றருவியில் தண்ணீா்வரத்து சற்று தணிந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
புதன்கிழமை பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் வீசியதால் ரம்மியமான சீதோஷ்ணம் நிலவியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.