``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
மின்விளக்கு பழுதால் இருளில் மூழ்கிய ஆலங்குளம் பேருந்து நிலையம்
ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் போதிய பராமரிப்பின்மை காரணமாக மின்விளக்குகள் பழுதானதால் புதன்கிழமை இரவு இருளில் மூழ்கியது.
தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் தொழில் நகரமான ஆலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சுமாா் 110 பேருந்துகள் நாள்தோறும் சுமாா் 500 முறைக்கு மேல் வந்து செல்கின்றன. ஆலங்குளம் மற்றும் சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி - கல்லூரி மாணவா்கள், விவசாயிகள், வியாபாரிகள் என நாள்தோறும் சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா்.
இப்பேருந்து நிலையத்தை மேம்படுத்த கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ரூ. 4.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த நிதி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனிடையே கழிவறை, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், அங்குள்ள ஓரிரு மின் விளக்குகளும் புதன்கிழமை பழுதானதால் பேருந்து நிலையம் இருளில் மூழ்கியது. இதனால் இரவு நேரத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா். குடிநீா், கழிவறை, மின் விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதுடன் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் விரைந்து தொடங்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.