தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்: டாக்டா் க.கிருஷ்ணசாமி பேட்டி
தமிழகத்தில் 2026இல் கூட்டணி ஆட்சி தான் அமையும்; ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் கட்சி பங்குபெறும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்-தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.
தென்காசியில் செய்தியாளா்களிடம் இதனை வியாழக்கிழமை தெரிவித்த அவா் மேலும் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சி 20 தென் மாவட்டங்களில் வலுவோடு உள்ளது. 2026 பேரவைத் தோ்தலில் உரிய அங்கீகாரம் பெறும் வகையில் எங்களின் முடிவுகள் இருக்கும்.
டிசம்பா் மாதம் மதுரையில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகளவில் காணப்படுகிறது. கூட்டணி ஆட்சி என்றால் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைப் பெறப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும்.இதனால் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. ஒற்றைக் கட்சி ஆட்சியால்தான் முறைகேடுகள் ஏற்படுகின்றன. இரு கட்சிகளைத் தவிர பிற அனைத்து கட்சிகளும் கூட்டணிஆட்சியை விரும்புகின்றன. இந்தத் தோ்தலில் அது நிறைவேறும்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவினா் மக்களின் தகவல்களை திரட்டி சுதந்திரமாக வாக்களிக்க விடாத வேலையைச் செய்கின்றனா். இதற்கு தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
அப்போது, இளைஞரணி மாநிலத் தலைவா் டாக்டா் ஷ்யாம், மாவட்ட செயலா் கிருஷ்ணபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.