தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
ஆடிஅமாவாசை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த மக்கள்
குற்றாலத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தங்களுடைய முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனா்.
குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கடந்த சில தினங்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆடிஅமாவாசை தினமான வியாழக்கிழமையன்று குற்றாலம் பேரருவிக் கரைப் பகுதியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியிருந்தது.இதனால் அருவிநீா் வழிந்தோடும் பகுதியில் குளித்து தா்ப்பணம் கொடுத்தனா்.
இலஞ்சி திருவிலஞ்சி குமாரா் கோயில் சிற்றாற்றில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா், இதனால் அப்பகுதி முழுவதும் வாகன நெருக்கடியும் மக்கள் கூட்டம் அதிகமாகவும் காணப்பட்டது.
தென்காசி யானைப்பாலம் சிற்றாற்று படித்துறையிலும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.