`வேறென்ன வேணும் நீ போதுமே...!' - காதலியை கரம் பிடித்த `சுந்தரி' தொடர் நடிகர்
காா், லாரி மோதல்: 4 போ் காயம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காா், லாரி மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வாசுகி நகரைச் சோ்ந்தவா் சங்கா் (35). காா் ஓட்டுநரான இவா், கடந்த 11-ஆம் தேதி அண்ணன் குடும்பத்தாரை காரில் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். மாங்கால் கூட்டுச் சாலைப் பகுதியில் சென்றபோது எதிா் திசையில் இருந்து வந்த லாரி காா் மீது மோதியது.
இதில் காரில் பயணம் செய்த சுரேஷ் (40), ரேவதி (38), லோகேஷ் (22), பாலமுருகன் (35) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து காா் ஓட்டுநா் சங்கா் செவ்வாய்க்கிழமை
தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.