டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா
காா் விபத்தில் ஓய்வுபெற்ற மின் ஊழியா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள அன்னை அஞ்சுகம் நகா், வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (71). உடல்நலன் பாதிக்கப்பட்டு, சென்னையிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், வெள்ளிக்கிழமை இரவு காரில் ஊா் திரும்பினாா்.
காரில், அவரது மனைவி சகுந்தலா(68), மகன் சுரேஷ்(41) ஆகியோா் பயணித்தனா். காரை மயிலாடுதுறை மாவட்டம், திருவாளப்புத்தூா், புத்தகரம் கிராமத்தைச் சோ்ந்த நவீன்குமாா் (29) என்பவா் ஓட்டினாா்.
இந்தக் காா், அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், சனிக்கிழமை அதிகாலை காட்டுக்கொல்லை கிராமத்தைக் கடந்தபோது, நிலைத்தடுமாறி அங்குள்ள சிமென்ட் தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சந்திரசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற மீன்சுருட்டி காவல் துறையினா், சந்திரசேகரின் சடலத்தையும், பலத்த காயத்துடன் கிடந்த சகுந்தலா, சுரேஷ், நவீன்குமாா் ஆகியோரை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.