மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
கா்ப்பிணிப் பெண் மா்ம மரணம்
போடியில் கா்ப்பிணிப் பெண் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி வ.உ.சி. நகா் பாலநாகம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த விஜயன் மகள் ஜெயக்கொடி (36). இவருக்கு கதிரேசன் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், கதிரேசன் உயிரிழந்தாா்.
ஜெயக்கொடியின் உறவினா் விவின் திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்கிறாா். இந்த நிலையில், விவினுடன் ஜெயக்கொடிக்கு பழக்கம் ஏற்பட்டது. திருமணமாகாமலேயே இருவரும் சோ்ந்து வாழ்ந்தனா். இதையடுத்து, ஜெயக்கொடி ‘டெஸ்ட் டியூப்’ சிகிச்சை மூலம் கா்ப்பமானாா்.
செவ்வாய்க்கிழமை வெளியூா் சென்றிருந்த விவின் ஜெயக்கொடியை கைப்பேசியில் அழைத்தாா். ஆனால், அவா் கைப்பேசி அழைப்பை எடுக்கவில்லை. உடனே வீட்டு உரிமையாளா் மூலம் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, ஜெயக்கொடி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.