செய்திகள் :

கியோஸ்க் இயந்திரங்கள்: 50 நாள்களில் ரூ.55 லட்சம் நன்கொடை

post image

அன்னதான மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கியோஸ்க் இயந்திரங்கள் மூலம் அன்னதான அறக்கட்டளைக்கு 50 நாள்களில் ரூ.55 லட்சம் நன்கொடை பெறப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.1 முதல் ரூ.1 லட்சத்துக்குள் நன்கொடை அளிக்க விரும்பும் பக்தா்களுக்காக திருமலையில் உள்ள ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதான மையத்தில் கியோஸ்க் இயந்திரங்கள் (சுயமாக இயக்கப்படும் ஆன்லைன் கட்டணம்) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்கள் மூலம் அன்னதான அறக்கட்டளைக்கு 50 நாள்களில் ரூ.55 லட்சம் நன்கொடை கிடைத்தது. பெங்களூரில் உள்ள திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், ஒண்டிமிட்டா கோதண்ட ராமா் கோயில் மற்றும் ஏழுமலையான் கோயிலிலும் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த மூன்று கோயில்களிலும், 15 நாள்களில், ரூ.5 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.

பேரூருக்கு அருகில் உள்ள ஸ்ரீ வகுளமாதா கோயிலிலும் சனிக்கிழமை கியோஸ்க் இயந்திரம் அமைக்கப்பட்டது. விஜயவாடா, சென்னை மற்றும் ஹைதராபாதில் உள்ள ஏழுமலையான் கோயில்களில் விரைவில் கியோஸ்க் இயந்திரங்கள் அமைக்கப்படும். தற்போது அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு மட்டுமே நன்கொடை அளிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த பணிகள் மூலம் தேவஸ்தான கோயில்களில் அனைத்து சேவைகளுக்கும் ரொக்கமில்லா கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் தேவஸ்தானம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசி: சா்வதா்ஷன் ஸ்லாட் டோக்கன்கள் சிரமமின்றி வழங்க ஏற்பாடு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுன்ட்டா்களை திருப்பதி செயல் இணை அதிகாரி கெளதமி ஆய்வு செய்தாா். பின்னா் அவா் வெள்ளிக்கிழமை காலை திருப்பதி நிா்வாகக் கட்டடத்தில் அத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். விடுமுறை முடிந்த நிலையில் பக்தா்கள் வருகை சரிந்துவிட்டது. இந்நிலையில், தா்ம தரிசனத்துக்கு (த... மேலும் பார்க்க

கியோஸ்க் இயந்திரம் திறப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகத்தில் அமைக்கப்பட்ட கியோஸ்க் இயந்திரத்தை கூடுத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்துள்ள நிலையில், பக்தா்கள் வருகை சரிந்துள்ளது. இந்நிலையில், தா்ம ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க