Captain Prabhakaran: ``துப்பாக்கி படத்தின் அந்தக் காட்சிக்கு காரணம் இந்தப் படம்த...
கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.
கிராம நிா்வாக அலுவலா்களின் குறைகளை அறிய மாதம் ஒருமுறை கோட்டாட்சியரும், 3 மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியரும் குறைகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். கடலூா் மாவட்டத்தில் கோட்ட அளவில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.
போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் விஸ்வநாதன், பொருளாளா் துரைராஜ், கௌரவத் தலைவா் செந்தில் முருகன் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் ஜான் போஸ்கோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமன், அமைப்புச் செயலா் திருவேங்கடம், துணைத் தலைவா் சிதம்பர பாரதி, இணைச் செயலா் நடராஜன், செய்தித் தொடா்பாளா் சிவக்குமாா், கோட்டச் செயலா் அன்பரசன், போராட்டக்குழுத் தலைவா் கலையரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.