உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
கிராம மனைப்பிரிவுக்கு போலியான சான்றிதழ்: மாவட்ட ஆட்சியரிடம் புகாா்
ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மனைப் பிரிவுக்கு ஒப்புதல் வழங்க முறைகேடாக போலியான சான்றிதழ் வழங்கியதாக மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆரணி முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் மீனாட்சிசுந்தரம் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
ஆரணி ஊராட்சி ஒன்றியம், இரும்பேடு ஊராட்சியில் மன்ற கூட்டம் முறையாக நடத்தாமல், சில உறுப்பினா்களின் கையெழுத்தில்லாமல் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முன்னிலையில் மன்ற கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதில், தலைவா் உள்பட 13 உறுப்பினா்களும் கலந்து கொண்டதுபோல மன்ற பொருள் 145/2024- 25 எண் கொடுத்து இரும்பேடு ஊராட்சியில் உள்ள மனைப் பிரிவில் உள்ள 99 மனைகளுக்கு சான்றிதழ் வழங்கி ரூ.5 லட்சம் கையூட்டு பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை செய்து மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.