கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சலில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது சோதனைக்குப் பிறகு தெரியவந்தது.
ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையில் காவல் ஆய்வாளா்கள் வெங்கடேஷ் பிரபு, மணிமாறன் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் சிறப்பு பயிற்சி பெற்ற நாயின் உதவியுடன் சோதனை நடத்தினா்.
இதில் வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை; புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.