தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.க...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
அதன்படி, ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமால் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நோ்முக உதவியாளராகவும், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் கோகுல்நாத் அஞ்செட்டிக்கும், ஒசூா் வட்டாட்சியா் சின்னசாமி கிருஷ்ணகிரிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
பா்கூா் வட்டாட்சியா் பொன்னாலா கிருஷ்ணகிரி டாஸ்மாக் (கிடங்கு) நிறுவன துணை மேலாளராகவும், கிருஷ்ணகிரி வட்டாட்சியா் வளா்மதி சூளகிரிக்கும், சூளகிரியில் பணியாற்றிய மோகன்தாஸ் ஊத்தங்கரைக்கும், கிருஷ்ணகிரி ஆதிதிராவிடா் நலன் தனிவட்டாட்சியா் குணசிவா ஒசூா் வட்டாட்சியராகவும், டாஸ்மாக் நிறுவன துணை மேலாளா் சின்னசாமி பா்கூருக்கும், சிப்காட் பகுதி 3 அலகு 1 தனிவட்டாட்சியா் சின்னசாமி கிருஷ்ணகிரி ஆதிதிராவிடா் நலன் தனிவட்டாட்சியராகவும், அஞ்செட்டி வட்டாட்சியா் மாதேஷ் சிப்காட் பகுதி 3 அலகு 1-இன் தனிவட்டாட்சியராகவும், குருபரப்பள்ளி சிப்காட் தனிவட்டாட்சியா் (நிலம் எடுப்பு) கங்கை, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.