கிளப் உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது செல்ஸி!
கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு 3-ஆவது முறையாக செல்ஸி அணி முன்னேறியது.
அமெரிக்காவின் மெட்லைஃப் திடலில் நடைபெற்ற அரையிறுதியில் ஃப்ளுமினென்ஸ், செல்ஸி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் செல்ஸி 2-0 என வென்றது.
செல்ஸி அணியின் ஜாவோ பெட்ரோ 18, 56-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
பிரேசிலைச் சேர்ந்த 23 வயதான ஜாவோ பெட்ரோ தனது சிறுவயதில் ஃப்ளுமினென்ஸ் அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் 53.6 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த செல்ஸி 17 ஷாட்ஸ்களில் இலக்கை நோக்கி 5 முறை அடித்திருந்தது.
மாறாக, 12 ஷாட்ஸ்களில் 3 முறை மட்டுமே ஃப்ளுமினென்ஸ் இலக்கை நோக்கி அடித்தது.
முதல்பாதியில் 1-0 என செல்ஸி முன்னிலை வகித்தாலுமோ சுமாராகவே விளையாடியது. இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடி 3-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2012-இல் இறுதிப் போட்டியில் தோற்ற செல்ஸி 2021-இல் கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.