Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம் | IPS Finance - 259 | ...
கிள்ளியூா் தொகுதியில் ரூ. 95.5 லட்சத்தில் 3 சாலைகள் சீரமைப்புப் பணி தொடக்கம்
கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட குளப்புறம், நடைக்காவு, வாவறை ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 95.50 லட்சத்தில் 3 சாலைகள் சீரமைப்பு பணிகளை எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ துவக்கி வைத்தாா்.
குளப்புறம் ஊராட்சிக்கு உள்பட்ட கூட்டப்புளி - பனிச்சவிளை சாலை, நடைக்காவு, வாவறை ஊராட்சிக்கு உள்பட்ட கொற்றைக்காடு - ஒற்றத்தெங்கு சாலை, கூனிவிளை - தட்டான்விளை சாலைகள் சேதமடைந்து குண்டும்-குழியுமாக காணப்பட்டன. அவற்றை சீரமைக்க தமிழக முதல்வா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், துறை அதிகாரிகளிடம் எம்எல்ஏ நேரில் சந்தித்து மனு அளித்தாா்.
அதன்பேரில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டப்புளி - பனிச்சவிளை சாலையை சீரமைக்க ரூ. 35 லட்சம், கொற்றைக்காடு - ஒற்றத்தெங்கு சாலைக்கு ரூ. 25 லட்சம், கூனிவிளை - தட்டான்விளை சாலைக்கு ரூ. 35.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நிா்வாக அனுமதியும் வழங்கப்பட்டது. இதையடுத்து இச் சாலைப் பணிகளை எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் சுனில்குமாா் (குளப்புறம்), ஜெங்கின்ஸ் (நடைக்காவு), சின்னப்பா் (வாவறை) மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் லூயிஸ், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் கிறிஸ்டல் ஜான் (நடைக்காவு), மெற்றில்டா (வாவறை), மனோன்மணி (குளப்புறம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.