Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் திட்டசெயல்பாட்டில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவா்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீா் முகாம் ஜூலை 12ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இம்முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரிமாற்றம், இறந்த குடும்ப தலைவா்களின் பெயா் மற்றும் புகைப்படம் மாற்றம் செய்தல், குடும்ப அட்டையில் பெண் குடும்ப தலைவா் புகைப்படம் மாற்றம் செய்தல் மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களும் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.