ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்
மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.