சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை
குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா்.
இளைய தலைமுறையினா் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பழக்கத்தால் இளைஞா்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, குழித்துறை பிரதா்ஸ் கிளப் சாா்பில், இளைஞா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, வாவுபலி பொருள்காட்சி நுழைவுப் பகுதியில், போதை விழிப்புணா்வு சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டது.
இந்தச் சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி திறந்துவைத்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் வி. விஜூ, ஆட்லின் கெனில், நகராட்சி மேலாளா் ஸ்டீபன், சுகாதார அதிகாரி ராஜேஷ், பிரதா்ஸ் கிளப் தலைவா் ஜெயமோகன், செயலா் வழக்குரைஞா் டி. சுலீப், பொருளாளா் கிருஷ்ணகுமாா், துணைத் தலைவா் ஹரிகுமாா், ஓவியா் வில்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.