சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்
குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா், சிதம்பரதாணு ஆகியோா் போக்குவரத்து விதிமுறைகள், விபத்து தவிா்ப்பு, போக்குவரத்து சிக்னல், இருசக்கர வாகனத்தில் பயணிப்பவா்கள் இருவரும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் ஆகியவை குறித்து மாணவா்களிடையே உரையாற்றி மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனா். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியா் இளங்கோ மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.