Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ஸ்டீபன் ஜெயபால் (44). இவா் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு குற்ற வழக்கில் ஒன்றில் கொலை முயற்சி வழக்கு குளச்சல் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஸ்டீபன் ஜெயபால் ஆஜராகாமல் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தாா். இவரை பற்றி அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஸ்டீபன் ஜெயபால் சவுதி அரேபியாவில் இருந்து மும்பை வழியாக கடந்த 7 ஆம் தேதி வருவதாக குளச்சல் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் மும்பை சென்று அவரைக் கைது செய்து, வியாழக்கிழமை இரணியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.