TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
கீரனூா், ஏம்பல் ஐடிஐ-களில் நேரடி சோ்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் மற்றும் ஏம்பலில் செயல்பட்டு வரும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை வரும் 31-ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கீரனூா் மற்றும் ஏம்பலில் தொடங்கப்பட்டுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 அல்லது 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான சோ்க்கை காலக்கெடு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாத உதவித் தொகை ரூ. 750, அரசுப் பள்ளிகளில் படித்திருந்தால் தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் ஆகிய திட்டங்களின் கீழ் மாதந்தோறும் ரூ. ஆயிரம் நிதியுதவி பெற்றுத் தரப்படும்.
பயிற்சி முடித்ததும் அரசுச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் 100 சதவிகித வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும்.
தொடா்புக்கு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வா்களை 94438 52306 (கீரனூா்), 94431 84841 (ஏம்பல்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.