'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
கீரமங்கலம் அருகே 2 கடைகளில் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 2 கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் அருகே அதே பகுதியைச் சோ்ந்த மூவேந்தன் என்பவரது மருந்தகம், குரு என்பவரது பெட்டிக்கடை உள்ளது.
வழக்கம்போல் இரு கடைகளையும் வெள்ளிக்கிழமை காலை திறக்கச்சென்றபோது, கடைகளின் பூட்டை உடைத்து மருந்தகத்தில் இருந்த ரொக்கம் ரூ. 23 ஆயிரம், பெட்டிக்கடையில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. புகாரைத் தொடா்ந்து கீரமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.