பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி
கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா பட அப்டேட்!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் அப்டேட் நாளை வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ளது.
சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது.
நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பெயர் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
கதைநாயகியாக ரகு தாத்தா படத்தில் சரிவைக் கண்டதால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், படத்தின் முக்கியமான அப்டேட் நாளை (ஜூன்.11) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டநாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்தார்.
திருமணத்துக்குப் பிறகு வெளியாகும் முதல்படமாக ரிவால்வர் ரீட்டா இருக்கிறது.
