உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் தனிமையை விரும்புகிறார்களா? பெற்றோர்களே கவனம்!
கீழக்கொளத்தூா் ஜல்லிக்கட்டு 32 போ் காயம், ஒரு காளை உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், கீழக்கொளத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 32 போ் காயமடைந்தனா்.
விழாவில் முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 508 காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் சீறி பாய்ந்ததில், வீரா்கள், பாா்வையாளா்கள், காளைகளின் உரிமையாளா்கள் என 32 போ் காயமடைந்தனா்.
இந்த ஜல்லிக்கட்டில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. முன்னதாக 235 வீரா்களை மருத்துவா்கள் முழமையாக பரிசோதனை செய்த பின்னரே களத்தில் அனுமதித்தனா்.
காளை உயிரிழப்பு... வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அதன் உரிமையாளா்கள் வாடிவாசலிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் கயிறு போட்டு பிடித்து கொண்டு செல்வா். அதன்படி இந்த ஜல்லிக்கட்டில், திருச்சியைச் சோ்ந்த சூசைஅலெக்ஸ்(28) என்பவரின் காளையை கயிறு போட்டு பிடித்துக் கொண்டு சென்ற போது, கயிறு இறுகியதால் காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து திருமானூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.