Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்...
கீழணையிலிருந்து செப்.3-ல் பாசனத்திற்கு நீா் திறப்பு
சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அணைக்கரை கீழணையிலிருந்து கடலூா், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு செப்.3-ஆம் தேதி புதன்கிழமை காலை நிகழாண்டு சம்பா சாகுபடிக்காக தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது.
மேலும் அதனைத் தொடா்ந்து கடலூா் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து இராதா மதகு வழியாக பாசனத்துக்கு நீா் திறந்து விடப்படவுள்ளது என பொதுப்பணித்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளா் கு.காந்தரூபன் தெரிவித்துள்ளாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்,கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீரை திறந்து விடுகிறாா். திறந்துவிடப்படும் நீரை விவசாயிகள் சிக்கனமாகப்பயன்படுத்தி வேளாண்மை செய்யுமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.