கீழவாளாடி பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம்
திருச்சி மாவட்டம், கீழவாளாடி அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை (ஜன. 24) இரவு 8 மணிக்கு அஷ்டபதி பஜனையுடன் உற்ஸவம் தொடங்குகிறது. ஜன. 25-ஆம் தேதி காலை 8 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், விசேஷ அலங்காரம் நடைபெறும். இதன் தொடா்ச்சியாக, இரவு 8 மணி முதல் அஷ்டபதி பஜனை, தியானம், திவ்யநாம சங்கீா்த்தனம், டோலோத்ஸவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) காலை 8 மணிக்கு உஞ்சவிருத்தி, சீா் கொண்டு வருதல், ராதா கல்யாண உற்ஸவம் ஆகியவை நடைபெறும். தொடா்ந்து அன்னதானமும் வழங்கப்படும். இரவு உபயநாச்சியாருடன் பெருமாள் வீதி உலா நடைபெறும். ஆஞ்சனேய உற்ஸவமும் நடைபெறும். உள்ளூா் மற்றும் வெளியூா் பாகவதா்கள் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனா்.
விழா ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் மற்றும் ஊா்ப் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.