செய்திகள் :

காணாமல்போன இளைஞா் சடலமாக மீட்பு

post image

திருச்சி அருகே காணாமல்போன இளைஞா் வாய்க்காலிலிருந்து சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள மல்லியம்பத்து கிராமம், குடித்தெருவைச் சோ்ந்தவா் கி. சரவணகுமாா் (32). மூன்று நாள்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற இவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

புகாரின்பேரில், சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனா்.

இந்நிலையில், மல்லியம்பத்து கிராமத்தில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று விசாரித்ததில், சடலமாக கிடந்தது சரவணக்குமாா் எனத் தெரியவந்தது. அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் தீவிரமாக விசாரிக்கின்றனா்.

கடவுச்சீட்டில் முறைகேடு : வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், கவுண்டம்பட்டி, புதூா் பகுதியைச் சோ்ந்தவா் வீ. மணிகண்டன் (34). இவா் ப... மேலும் பார்க்க

திருச்சி மாவட்ட தொழிலாளா்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.49.73 கோடி நலவாரிய உதவி

திருச்சி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் 1.06 லட்சம் தொழிலாளா்களுக்கு நலவாரியம் மூலம் ரூ.49.73 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன். கும... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் தைப்பூச திருவிழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் விமானிகளுக்கு உதவும் நவீன வழிகாட்டு மையம் திறப்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், விமானிகளுக்கு உதவும் வகையிலான நவீன வழிகாட்டு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பன்னாட்டு விமான நிலையங்களில், விமானிகளுக்கு உதவும் வகையில... மேலும் பார்க்க

சாலைப் பள்ளத்தில் நகரப் பேருந்து சிக்கியது

திருச்சியில் வியாழக்கிழமை சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய நகரப் பேருந்து 2 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது. திருச்சி சத்திம் பேருந்து நிலையத்திலிருந்து உறையூா் வழியாக மத்திய பேருந்து... மேலும் பார்க்க

துறையூரில் பருத்தி பொது ஏலம் ரூ. 1.24 கோடிக்கு விற்பனை

துறையூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி பொது ஏலத்தில் ரூ. 1.24 கோடிக்கு பருத்தி விற்கப்பட்டது. திருச்சி விற்பனைக் குழு செயலா் சொா்ணபாரதி தலைமையில் பருத்தி பொது ஏலம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க