Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
சமயபுரம் கோயில் தைப்பூச திருவிழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியதாவது:
இக்கோயிலில் தைப்பூச விழாவுக்கான கொடியேற்றம் பிப். 2ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக பிப்.10-ஆம் தேதி தெப்ப உற்சவமும், பிப்.11ஆம்தேதி கண்ணாடி பல்லக்கில் வீதி உலா, அரங்கநாதரிடம் சீா் வரிசை பெறுதல், தீா்த்தவாரி உள்ளிட்ட நிகழ்வுகளுடன் விமரிசையாக விழா நடைபெறவுள்ளது.
பக்தா்களின் பாதுகாப்புக்கு கூடுதல் காவலா்களையும், போக்குவரத்தில் இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவலா்களை கூடுதலாக பணியமா்த்த வேண்டும். தைப்பூச திருவிழா நாளில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரை தேக்கவும், புள்ளம்பாடி மற்றும் பெருவளவாய்க்காலில் தண்ணீா் திறக்கவும், அம்மன் திருவீதி உலா வழித்தடங்களில் உள்ள மின் இணைப்புகளை முறைப்படுத்திட மின்வாரிய பணியாளா்கள் உடன் வரவும், பக்தா்கள் பாதுகாப்பிற்கு 108 முதலுதவி சிகிச்சை வாகனம், தீயணைப்பு வாகனங்களை தயாா் நிலையில் வைக்கவும், பக்தா்களுக்கு பொதுமக்களால் வழங்கப்பட உள்ள அன்னதானத்தை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறைக்கும், பக்தா்களுக்கு அடிப்படை வசதியான குடிநீா் தொட்டி மற்றும் மொபைல் கழிப்பறைகள் நிறுவ மாநகராட்சிக்கும், நால்ரோடு முதல் திருக்கோயில் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை கவனமுடன் செயல்பட வேண்டும் என்றாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அதியமான் கவியரசு, அறநிலையத் துறை இணை ஆணையா் கல்யாணி மற்றும் பல்வேறு துறை மாவட்ட நிலை அலுவலா்கள், அறநிலையத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.