எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த கடத்தப்பட்ட பெண் மீட்பு !
கடவுச்சீட்டில் முறைகேடு : வெளிநாடு செல்ல முயன்றவா் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், கவுண்டம்பட்டி, புதூா் பகுதியைச் சோ்ந்தவா் வீ. மணிகண்டன் (34). இவா் புதன்கிழமை இலங்கை வழியாக லண்டன் செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்திருந்தாா். இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கவிருந்த நிலையில், அவரது பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவினா் வழக்கமான பரிசோதனைகளுக்கு உள்ளாக்கினா். அப்போது அவா் போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குடியேற்றப் பிரிவினா் அளித்த புகாரின்பேரில், திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.