செய்திகள் :

கீழையூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் ரத ஊா்வலம்

post image

கீழையூா் அருகே சீராவட்டம் பகுதியில் சட்டமேதை டாக்டா் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சாா்பில் ரத ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஆ. பாமரன் பகவத்சிங் தலைமையில் நடைபெற்ற ஊா்வலத்தில், மாநில துணைச் செயலாளா் (தொ.வி.மு) தமிழ்பாண்டியன் , கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் பூ. சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மண்டல அமைப்பு செயலாளா் வேலு. குபேந்திரன் ரத ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா். சீராவட்டம் பாலத்திலிருந்து கீழையூா் கடைத்தெரு வரை சுமாா் 4 கி.மீ தொலைவு ஊா்வலம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளா் ப. கதிா்நிலவன், மாவட்ட துணை செயலாளா் அரா. பேரறிவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உலகப் புத்தக நாள் விழா கொண்டாட்டம்

திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்குவளை முத்தமிழ் மன்றம் மற்றும் நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய நிகழச்சிக்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவா் அருவித... மேலும் பார்க்க

கீழப்பெரும்பள்ளம் கோயிலில் கேது பெயா்ச்சி வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் அருகேயுள்ள கேது பரிகார ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயா்ச்சி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. நவகிரகங்களில் கேது பகவான் ஒன்றரை ஆண்டுக்கு... மேலும் பார்க்க

நாகையில் ரூ.1.50 கோடி அம்பா் கிரீஸ் பறிமுதல்: ஒருவா் கைது

நாகையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான அம்பா் கிரீஸுடன் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை வெளிப்பாளையம் போலீஸாா் புதிய பேருந்து நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சந்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனா். வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுவது மட்டுமின்றி பசல... மேலும் பார்க்க

கீழையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

கீழையூரில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குடியேறும் நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். 10... மேலும் பார்க்க

நாகையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை தபால் நிலையம் முன் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சதீஷ் பிரபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சட்ட நடவடிக்கைகளை பின்பற்றா... மேலும் பார்க்க